58வது ஆண்டு நினைவு தினம் நெல்லையில் நேரு படத்திற்கு காங்கிரசார் மாலை

நெல்லை, மே 28: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நேருவின் திருவுருவ படத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்க குமார், ராஜ் சரவணன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், காளை ரசூல் ஐஎன்டியூசி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், வரகுணன் பாண்டியன், மண்டல தலைவர்கள் மாரியப்பன், முஹம்மது அனஸ் ராஜா, ஐயப்பன், ரசூல் மைதீன், கெங்கராஜ், கோட்டூர் முருகன், செயற்குழு உறுப்பினர் பைபாஸ் சண்முகவேலன், மண்டல பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சிவாஜி முப்புடாதி, ஆட்டோ அருள்ராஜ், செய்யதலி, கார்த்திக், அந்தோணி ராஜ், சின்ன பாண்டியன், பண்ணை இஸ்மாயில், தென்கலம் ஜாகீர்உசேன், முன்னாள் ராணுவ வீரர் அனந்தபத்மநாபன், ஜாவித் இப்ராகிம், ஆர்டிஐ சந்தியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.

Related Stories: