கொளக்குடியில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு 255 பயனாளிகளுக்கு ரூ.35.37 லட்சம் நலஉதவி

தொட்டியம், மே 28: தொட்டியம் அருகே கொளக்குடியில் அரசின் சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. முகாமிற்கு டிஆர்ஓ., பழனிக்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை கலெக்டர் கவிதா, தேர்தல் துணை தாசில்தார் தங்கவேல், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி ஆர்டிஓ மாதவன் வரவேற்றார்.

விழாவில் ரூ.6 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா 10 பயனாளிகளுக்கும், ரூ.9 லட்சத்தில் 75 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 15 பேருக்கு 3.37 லட்சத்தில் இயற்கை மரண உதவித்தொகை என மொத்தம் 255 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 37 ஆயிரத்து 97 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். தொட்டியம் தாசில்தார் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

Related Stories: