பூசலாங்குடி, பிச்சன்கோட்டகம், வரம்பியம் ஊராட்சிகளில் குடிமனை பட்டா வழங்க ஜமாபந்தியில் கோரிக்கை மனு

திருத்துறைப்பூண்டி, மே 28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தனி துணை ஆட்சியரை நேரில் சந்தித்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியசெயலாளர் மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாககுழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சியில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை மூலம் குடிமனை இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்து இடத்தின் உரிமையாளருக்கு உரியத்தொகை வழங்கியும் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனாளிகள் தேர்வு செய்தும் இதுநாள் வரை பட்டா வழங்காமல் உள்ளனர்.

அதேபோல் பிச்சன்கோட்டகம் ஊராட்சியிலும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை மூலம் குடிமனை வழங்கிட (2000-ஆம் ஆண்டில்) இடம் தேர்வு செய்து இடத்தின் உரிமையாளர்கள் உரியத்தொகை செலுத்தியும், 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், பயனாளிகள் தேர்வு செய்தும் இதுநாள் வரை பட்டா வழங்காமல் உள்ளனர். வறுமை கோட்டிற்குகீழ் வாழும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வரம்பியம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை முலம் 1995-ஆம் ஆண்டு குடிமனை வழங்க இடம் தேர்வு செய்து இடத்தின் உரிமையாளருக்கு உரியத்தொகை வழங்கியும் 38 பயனாளிகள் தேர்வு செய்து 27 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுநாள் வரை பட்டா வழங்காமல் உள்ளனர். வறுமைகோட்டிற்குகீழ் வாழும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற முடியாமல் பெறும் சிரமத்திற்கு உட்பட்டு வருகின்றனர்.

பூசலாங்குடி, பிச்சன்கோட்டகம், வரம்பியம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: