பழமாபுரம் மதுரைவீரன் கோயில் திருவிழா

க.பரமத்தி, மே 28: க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, சப்த கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோவிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.

நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று கிடா வெட்டு நிகழ்ச்சியும் தொடர்ந்து பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: