கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன்நேவி அணி வெற்றி

கரூர், மே 28: கரூரில் நடந்த ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் நேவி அணி முதலிடத்தை பெற்றது. கரூர் கூடைப்பந்து கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 21ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டிகள் அனைத்தும் முதலில், லீக் போட்டிகளாகவும், பின்னர் நாக் அவுட் போட்டிகளாகவும் நடைபெற்று வந்தது. குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று காலை முதல் மாலை வரை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

நேற்று இரவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியன் நேவி அணியுடன், இந்தியன் வங்கி சென்னை அணி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியன் நேவி அணி 92-85 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வென்றது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கலந்து கொண்டு, முதல் நான்கு இடங்களை பெற்ற இந்தியன் நேவி, இந்தியன் வங்கி, சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், இந்தியன் ஏர்போர்ஸ் அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்வில் கருர் கூடைப்பந்து நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: