செல்போன் திருடியதாக முதியவரை தாக்கி போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

விருத்தாசலம், மே 28: விருத்தாசலம் பாலக்கரை அருகில் உள்ள ஆலடி ரோட்டில் உள்ள வீடு ஒன்றில் செல்போன் திருடியதாக கூறி முதியவர் ஒருவரை பிடித்து தாக்கியதுடன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.அதன் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார், அந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினர். கம்மாபுரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் மகன் சுப்பிரமணியன்(55) என்பதும், தான் திருமண புரோக்கர் எனவும் பெண் பார்ப்பதற்காக இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததால் அவருடைய பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதையடுத்து அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால் அப்பகுதி மக்கள் கூறும் போது, இவர் தினமும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் நுழைந்து வருவதாகவும், பல வீடுகளில் செல்போன்கள் திருடப்பட்டதாகவும், தற்போது வீட்டில் செல்போன் திருடும் போது கையும் களவுமாக பிடித்து வைத்ததாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: