சொத்து வரி சீராய்வு சூழலுக்கு ஏற்ப திட்டத்தை அறிவிக்க கோரிக்கை

கடலூர், மே 28: தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சொத்து வரி விதிப்பு வழிகாட்டுதல் சம்பந்தமாக நகராட்சி வரி செலுத்துவோர் நல சங்கம் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது தமிழகத்தில் தங்கள் தலைமையில் சிறந்த மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  நகராட்சியில் தற்போது புதிய சொத்து வரி விதிப்பதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கட்டிடத்தை அளந்து கொண்டு, சொத்துவரி சுய மதிப்பீட்டு படி விண்ணப்பத்தைக் கொடுத்து, நீங்களும் உங்கள் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் அளந்து கொண்டு எங்களை நகராட்சியில் வந்து பாருங்கள் என்று சொல்லி செல்கின்றார்கள். இந்த செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்த முறையில் வரி சீராய்வு செய்வதனால் லஞ்சம், லாவண்யம் பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு.எனவே  சொத்து வரி சீராய்வு செய்யும் தற்போதுள்ள நடைமுறையில் உள்ள திட்டத்தை நிறுத்தி வைத்து சூழலுக்கேற்ப சரியான திட்டத்தை அறிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: