மாணவர்களுக்கு கோடை அறிவியல் திருவிழா

கடலூர், மே 28: கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் அறிவியல் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்காக ஜூன் 5ம் தேதி அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத் தலைவர் அனிஷாராணி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவியர் தங்களது விவரங்களை 04142-221772, 99442 52640, 93422 98590 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 70 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 2ம் தேதி வரையில் முன்பதிவு செய்யப்படும், என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் பாப்பாத்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: