கடையடைப்பு காத்திருப்பு போராட்டம்

காங்கயம், மே 28: காங்கயம் அருகே நத்தக்காடையூரில் கீழ்பவானி பாசன வாய்க்காலில்(எல்.பி.பி.) கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்று வட்டார கிராமங்களில் 200 கடைகள் அடைக்கப்பட்டன.  இந்த போராட்டதிற்கு நத்தக்கடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ஈரோடு கணேசமூர்த்தி, திருப்பூர் சுப்பராயன், பாஜ மாநில விவசாய அணி தரைலவர் நாகராஜ், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, இயற்கை வாழ்வுரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பொடாரன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, காங்கயம் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ், கொ.ம.தே.க, மாவட்ட தலைவர் கங்காசக்திவேல், பல்வேறு அமைப்பினர் விவசாயிகள் பொதுமக்கள் பெண்கள் உள்பட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  

Related Stories: