குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கதகளி நாட்டிய நிகழ்ச்சி

பாலக்காடு, மே 28: கேரளாவில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணன் ஆட்டம் கதகளி நாட்டிய நிகழ்ச்சி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், கிருஷ்ணர் ஆட்டம் கதகளி நாட்டிய நிகழ்ச்சியை இரவு காண ஏராளமான பக்தர்கள் கோயில் வாளகத்தில் திரண்டிருந்தனர். சுயவரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கதகளி நாட்டிய நிகழ்ச்சியில் சேதுமாதவன் கிருஷ்ணனாக வேடம் தரித்தும், களியோகம் ஆசான் சசிதரன் யவணன் வேடம் தரித்தும் நாட்டியம் அரங்கேறினர். இதனை தொடர்ந்து தினந்தோறும் காளியமர்தனம், கம்சவதம் ஆகிய தலைப்பில் கதகளி நாட்டியங்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை குருவாயூர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: