அரசு பஸ்களை நடுவழியில் நிறுத்தி சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்

ஊட்டி, மே 28:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால், அனைத்து பஸ்களும் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ்களில் பயணி, கண்டக்டர்களிடம் பரிசோதனை செய்வதற்காக வரும் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் சிலர் பஸ்களை நடுவழியில் 15 நிமிடங்கள் நிறுத்திக் கொள்கின்றனர். முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே பஸ்சை  செல்ல அனுமதிக்கின்றனர்.

இதனால், பயணிகள் உரிய நேரத்தில் தாங்கள் இடத்திற்கு செல்ல முடியாத நிைல ஏற்படுகிறது. பொதுவாக, செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் ஒரு பஸ்சில் ஏறி பயணச்சீட்டை சோதனை செய்யும் போது, பஸ் சென்று கொண்டே இருக்கும். முழுமையாக சோதனை செய்த பின், சம்பந்தப்பட்ட செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது சில செக்கிங் இன்ஸ்ெபக்டர்கள் பஸ்சை 10 முதல் 15 நிமிடம் வரை நிறுத்திக் ெகாண்டு ெசக்கிங் என்ற ெபயரில் நேரத்தை விரயமாக்குகின்றனர். இதனால், சில சமயங்களில் பயணிகள் சம்பந்தப்பட்ட செக்கிங் இன்ஸ்பெக்டர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பஸ்ைச நிறுத்தி டிக்கெட்டுகளை பரிசோதனை செய்வதை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ேமலும், பஸ்சில் பயணித்த படியே ேசாதனை ேமற்கொள்ள ேவண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: