நேரு நினைவு தினம் அனுசரிப்பு மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் ஜூன் 2 முதல் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்

கோவை, மே 28: மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில், ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலானது, ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன் கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர் சத்திரம், தென்காசி, ராஜபாளையம், வில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை நிலையங்களில் நின்று சென்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலானது, ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: