ராஜீவ்காந்தி பற்றி அவதூறு பேச்சு சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 28: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், ராஜீவ்காந்தி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்து கோவை காந்திபார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் சிறப்புரையாற்றினார். இதில், பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சீமானை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர், அவரது உருவப்படத்தை அவமதித்து கிழித்து வீசினர். இப்போராட்டத்தில், நிர்வாகிகள் ஐ.எஸ்.மணி, ரகுராமன், கணபதி அசோக், ஹனீபா, ஆர்.ஜி.பி.நடராஜ், சக்தி சதீஷ், அருண்குமார், கோபிநாத், புருஷோத்தமன், நவீன், சச்சிதானந்தம், விஷ்ணு, பிரேம்குமார், அப்பாஸ், நவ்பால், பன்னீர்செல்வம், கபில், இந்துராஜ், சுராஷ், சக்கரவர்த்தி, பாலாஜி, விக்னேஷ், சதீஷ், ரமேஷ், சவுந்தர், கோகுல், தாண்டவமூர்த்தி, கீர்த்தி, நிஜார், தனுஷ், சந்தோஷ், நித்யானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: