ரூ.1.25 கோடியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு

கோவை, மே 28:  கோவை மாநகராட்சி வார்டு எண் 99, 100க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும் அங்கன் வாடி மையத்தை  சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது: கோவை மாநகராட்சி வார்டு எண் 99, 100க்கு உட்பட்ட மேட்டூர், ஈஸ்வரன் செட்டியார் வீதி, கணேசபுரம், அம்மன்புதூர், அண்ணாபுரம், ஈச்சனாரி, கோண்டீஸகாலனி ஆகிய 7 இடங்களில் பிரதமரின் பொது மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டிடம், கோணவாய்க்கால்பாளையத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய கழிவறை கட்டிடம் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். மேலும், இக்கட்டுமானப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சம்சவேணி, மாமன்ற உறுப்பினர்கள் அப்துல்காதர், குணசேகரன், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் சபரீஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: