சிஐடியு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு தொழிற்சங்கம் துவங்கி, ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு, ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த  10ம் தேதி, திடீரென தொழிற்சாலை நிர்வாகம், 23 பேரை, பணி நீக்கம் செய்து. ஊதியத்தையும் வழங்காமல் இழுத்தடித்தது.

இந்நிலையில், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கடந்த மாத ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். இப்பிரச்னையில் தொழிலாளர் நலத் துறை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  சிஐடியு சார்பில், தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் டி.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: