கிணற்றில் விழுந்து வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் வள்ளலார் நகர் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் அன்பு (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி (35). இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அன்பு, தனது திருமண நாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில் இருந்தே மது அருந்தி போதையில் இருந்தார்.

மாலை அவர், தைலாவரம் சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். அன்பு வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தைலாவரத்தில், உள்ள விவசாய கிணற்றில் சென்று பார்த்தனர். அங்கு அன்பு சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: