குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு

சேலம், மே 27:  மேட்டூர் சாணரப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு தரணிஷ் (6) ஆண் குழந்தை உள்ளது. ரமேஷ் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர் மல்க  மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது குழந்தை தரணிசுக்கு இடதுபக்க மூளை செயலிழந்து விட்டதால் உயிரை காப்பாற்றுவதற்காக ₹15 லட்சம் வரை கடன் வாங்கி சிகிச்சை அளித்தோம். இதற்காக வீடு, நிலத்தை விற்றுவிட்டோம். இதனால் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமமாக உள்ளது. குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளோம். ஒரு ஆண்டு சிகிச்சை அளித்தால் காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ₹10 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, எனது குழந்தையின் மருத்துவத்திற்கு முதல்வரும்,  மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.  

    

Related Stories: