நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

நாமக்கல், மே 27: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த ஜமாபந்தியில், லக்கபுரம், ஏகே சமுத்திரம், பாச்சல், கல்யாணி, ஆர்.புளியம்பட்டி, நவணி, கதிராநல்லூர், தாத்தையங்கார்பட்டி, கண்ணூர்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த வருவாய் கணக்குள் சரிபார்க்கப்பட்டது.முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 40 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களும் கம்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன் நாமக்கல் தாலுகாவில் உள்ள 56 கிராமங்களிலும் வருவாய்த்துறையினர் சிறப்பு முகாம் நடத்தி, பட்டாமாறுதல், பட்டா வகை மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் காரணமாக ஜமாபந்தி நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வருவாயத்துறையினர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: