புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ₹30 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலம், மே 27: புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர், ஏ.கே.சமுத்திரம் மின்னாம்பள்ளி ஊராட்சிகளில், தலா ₹10 லட்சம் மதிப்பில் 30 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜைக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கௌதம், துரை ராமசாமி தலைமை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். இதில், ராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்குமார், பிடிஓ அசோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், கஜேந்திரன், நடராஜ், வளர்மதி கிருஷ்ணன், சண்முகம், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: