பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

ஓசூர், மே 27:  ஓசூர் பழைய ஏஎஸ்டிசி அட்கோ பகுதியை சேர்ந்தவர் வைசாலி(32). இவர் கடந்த, 22ம் தேதி  இரவு அவரது வீட்டருகே நடந்து சென்றுள்ளார். அப்போது டூவீலரில் இளைஞர் ஒருவர், வைசாலி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத வைசாலி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், இளைஞர் வேகமாக சென்றுவிட்டார். இதுகுறித்து வைசாலி, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: