ஓசூர் ஜி.ஹெச்சில் தலைமை மருத்துவருக்கு பிரிவு உபசார விழா எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு

ஓசூர், மே 27: ஓசூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பூபதி என்பவராக பணியாற்றி வந்தார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு, ஓய்வு பெறும் தலைமை மருத்துவர் பூபதியை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், இணை இயக்குனர்கள் கிருஷ்ணகிரி பரமசிவம், திருப்பத்தூர் மாரிமுத்து, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஜோதிபாசு, மருத்துவர்கள் விஜயன், கார்த்திக், ஓய்வு மருத்துவர் பொன்ராஜ், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மருந்தாளுநர் ராஜசேகர், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: