ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, மே 27: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன், தர்மபுரி மாவட்ட மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், 77 மாத அகவிலைப்படியை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல அமைப்பு மாநில இணை செயலாளர் குப்புசாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சுருளிநாதன், பெருமாள், சுந்தரமூர்த்தி, கோபாலன், சுப்பிரமணியன், சோமசுந்தரம், முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    

Related Stories: