கண்டன ஆர்ப்பாட்டம்

அரூர், மே 27: அரூர் தாலுகா அலுவலகம் முன், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.சி.க., மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பெட்ரோல் -டீசல் மற்றும் எரிவாயு மீதான வரிகளை கைவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், முத்து, மல்லிகா, குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், விஸ்வநாதன், கமலா மூர்த்தி, அல்லிமுத்து, வி.சி.க., மண்டல செயலாளர் நந்தன், சாக்கன் சர்மா, ராமச்சந்திரன், மூவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல், கடத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலைய்யா தலைமை வகித்தார். மாநில நிர்வாகி நந்தன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஜெகநாதன், பார்வதி, தமிழ், அன்வர், குமரன், திருமால், சக்திதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: