‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ குதிரை பந்தயம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

ஊட்டி, மே 27: ஊட்டி ரேஸ்கோர்சில் நேற்று நடந்த ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்ேடக்ஸ்’ குதிரை பந்தய போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டி ரேஸ்கோர்சில் குதிரை பந்தயங்கள் நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான குதிரை பந்தயம் கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக பெங்களூர், சென்னை, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் ஊட்டி குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளன.

தினமும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்து வருகிறது. தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், முக்கிய போட்டிகளில் ஒன்றான ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகான குதிரை பந்தயம் நேற்று நடந்தது. இதில், 12 குதிரைகள் பங்ேகற்றன. 1600 மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் குயின் ஸ்பிரிட் என்ற குதிரை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அந்த குதிரையின் உரிமையாளர் மற்றும் ஜாக்கி ேஷர்வன் ஆகியோருக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பந்தயம் நடந்தது. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டது. ஊட்டியில் நடந்த இக்குதிரை பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Related Stories: