கேஐடி மாணவர் முதலிடம்

கோவை, மே.27: உத்திர பிரதேசத்தில் உள்ள நொய்டா இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான ‘டாய்கெதோந் 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஜெயராமன்  பங்கேற்றார். கேஐடி கல்லூரியின் டீன் ப்லேஸ்மன்ட் முனைவர் மஹாலட்சுமி, உதவி பேராசிரியர் சேவியர் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் வழிக்காட்டுதல்படி ‘ ஸ்டெம் எஜுகேஷன் பார் யங் மைண்ட்ஸ்’ என்ற திட்டத்தை மாணவர் ஜெயராமன் சமர்பித்தார். பின்னர் தடம் 3 தொழில் வல்லுநர்கள் பிரிவில் தனது புதுமையான யோசனையை நிரூபித்து ‘டாய்கெதோந் 2022’ல் முதலிடம் பிடித்து ரொக்கப்பரிசை வென்றனர்.

Related Stories: