காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை

கோவை மே 27: கோவை  குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.  கூலி தொழிலாளி. இவர் மகன் சக்திவேல் (17). இவர் கோவையில் உள்ள ஒரு  பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து  வந்துள்ளதாக தெரிகிறது. அந்தப்பெண் இவரது காதலை ஏற்கவில்லை. நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த சக்திவேல், ‘‘என் காதலி என் காதலை  ஏற்கவில்லை.  நான் அவரை சந்தித்து பல முறை பேசினேன். அவர் என் காதலை  தொடர்ந்து நிராகரித்து விட்டார். அவர் இல்லாமல் இந்த உலகத்தில் நான் வாழ  விரும்பவில்லை. எனவே நான் தற்கொலை செய்யப் போகிறேன்’’ என கடிதம் எழுதி  வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக  குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: