இவ்வாறு அவர் கூறி உள்ளார். பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

ஈரோடு, மே 27: நம்பியூர், சிஎஸ்ஐ வீதியை சேர்ந்த 17 வயது மாணவி கெடாரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தேர்வு முடிந்து வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இது குறித்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், பவானி அடுத்துள்ள சேவண்டியூடிரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 தேர்வு எழுத சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் பவானி போலீர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு பெரியசேமூர், வேலாநகரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி லதா (34). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் இல்லாததால் லதாவின் சகோதரர் ஈரோடு வடக்கு போலீசில் இது குறித்து புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: