வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ரகளை

திண்டிவனம், மே 27: மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணி, ஓடை தூர்வாரும் பணி போன்ற பல்வேறு பணிகள் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செய்த பணிக்கு முழுமையான தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதனால் நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் அலுவலக ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். இதனால் ஊழியர்களுக்கும், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: