திண்டிவனத்தில் சோகம் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

விருத்தாசலம், மே 27: விருத்தாசலம் அடுத்த கருவேபிலங்குறிசி அருகே உள்ள டிவி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முருகானந்தம்(32). பிஇ, எம்பிஏ பட்டதாரியான இவர் அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளராக இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த வருடம் திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் இவரும் அவ்வப்போது வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த அவர் மீண்டும் அடுத்த வாரம் வெளிநாடு செல்ல இருந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு கருவேப்பிலங்குறிச்சிக்கும் டி.வி. புத்தூருக்கும் இடையே உள்ள மேம்பாலம் பாலம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று முருகானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 24ம் தேதி முருகானந்தன் உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு நேற்று ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.புத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் முன் விருத்தாசலம்-திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகானந்தத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரோ அடித்துக் கொன்று விட்டதாகவும், இதனால் இச்சம்பவத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்து சென்ற விருத்தாசலம் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின் மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் பிரேதத்தை கொண்டு சென்ற, அவர்கள் டி.வி.புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கருவேப்பிலங்குறிச்சி-கும்பகோணம் சாலையில் அமர்ந்து மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மீண்டும் சமாதானப் படுத்தி போராட்டத்தை கலையை செய்தனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: