5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு பெரியசாமி நினைவிடத்தில் அனைத்துக்கட்சியினர் அஞ்சலி

தூத்துக்குடி, மே 27: தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன்பெரியசாமி,

எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் எபனேசர் பெரியசாமி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன்பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ராஜாபெரியசாமி, அசோக்பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, அணி அமைப்பாளர்கள் மோகன்தாஸ் சாமுவேல், மதியழகன், ரமேஷ், அன்பழகன், கஸ்தூரிதங்கம், சித்திரை செல்வன், சங்கரநாராயணன், உமாதேவி, அந்தோனிஸ்டாலின், ஜெபசிங், முருகஇசக்கி, ஆனந்த்காபிரியேல்ராஜ், அருண் குமார், பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், முத்துதுரை, ராமர், ஜேசையா, ஆர்தர்மச்சாது, சுபேந்திரன், நாகராஜன் பாபு, நலம்ராஜேந்திரன், அந்தோணிகண்ணன், மார்கின் ராபர்ட், சுரேஷ்குமார், அருண்சுந்தர், செல்வின், கிறிஸ்டோபர் விஜயராஜ், பாலமுருகன், பால்மாரி, மாநில பேச்சாளர் சரத்பாலா, பகுதி செயலாளர்கள் ஜெயக் குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, சற்குணம், முத்துராஜ், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சரவணக்குமார், சோமசுந்தரி, விஜயலட்சுமி, வைதேகி, வட்ட செயலாளர்கள்  பாலு என்ற பாலகுருசாமி, நாராயணன், டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவிசந்திரன், சுரேஷ், கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வக்குமார், ராஜாமணி, முத்துச்செல்வம் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர் செந்தூர்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், அவைத்தலைவர் அருணாசலம், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி, தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதிஅம்பாசங்கர், துணை தலைவர் ஆஸ்கர், மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், துணை தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, மாநில இளைஞர் காங். செயலாளர் நடேஷ்குமார், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட துணை செயலாளர் செல்லச்சாமி, இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கரும்பன், மாநகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் சுப்புராஜ், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பெரியசாமியின்  குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கினர்.

Related Stories: