வழக்குகளை விரைந்து முடிக்க கோரி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி, மே 27: திருச்சி முகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கோரி 7 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த சிறையில் போலி பாஸ்போர்ட்டில் வந்தது, சட்டவிரோதமாக தங்குவது, கள்ளத்தோணியில் தப்ப முயற்சிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள், பல்கேரியா, ரஷ்யா, ஹங்கேரி, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கோரி முகாம் சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முகாம் சிறையில் நேற்று 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை இலங்கை தமிழர்கள் தொடர்ந்தனர்.

Related Stories: