தனியார் பள்ளிகளில் 25% இலவச சேர்க்கைக்கு 3,116 விண்ணப்பங்கள்

திருவாரூர், மே 27: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இலவச சேர்க்கைக்கு 3 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான வரும் கல்வியாண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் கடந்த 25ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டத்தில் 164 பள்ளிகளில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 475 இடங்களுக்கு 3 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 30ம் தேதி சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் 25 சதவிகித்திற்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: