அடிக்கடி வாகன விபத்து நடக்கும் செல்லாண்டிபாளையம் பிரிவு அருகே பேரிகார்டு அமைக்க கோரிக்கை

கரூர், மே 27: அடிக்கடி வாகன விபத்து நடைபெற்று வரும் ராயனூர் செல்லாண்டிபாளையம் பிரிவு அருகே பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பகுதியில் இருந்து திண்டுக்கல், திருச்சி பைபாஸ் சாலை, ராயனூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர் ராயனூர் வழியாக சென்று வருகிறது. இந்த சாலையில் ராயனூர் பகுதிக்கு முன்னதாக செல்லாண்டிபாளையம் பகுதிக்கான சாலை பிரிகிறது. மேலும், இதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் செயல்படுகிறது. இந்நிலையில், பிரிவுச் சாலை அருகே அடிக்கடி இரண்டு சக்கர வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் பிரிவுச் சாலையின் அருகே பேரிகார்டு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு பிரிவுச் சாலையோரம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: