ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம்: ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், நிர்வாகிகள், மணமை எழில் ராவணன், சாலமன், சிந்தனை சிவா, பிரகாஷ், கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய, பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: