கூரியர் ஊழியரிடம் செல்போன் பறிப்பு: இரண்டு வாலிபர்கள் கைது

ஆவடி: திருமுல்லைவாயலில் பைக்கில் சென்ற கூரியர் நிறுவன ஊழியரின் செல்போன் பறித்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பரத் (30). பிரபல கூரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியர். இவர் கடந்த 24ம் தேதி இரவு வேலை முடிந்து, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் வழியே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் டயர் திடீரென பஞ்சரானது அதை அங்கேயே நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், பரத்தை சரமாரி தாக்கி, அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பித்து சென்று விட்டனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று இரண்டு மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக போலீசார்  விசாரணை நடத்தினர். இதில், செல்போன் பறிப்பு வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் மாலை திருமுல்லைவாயல் பிரவீன் (19), திலீப்குமார் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பரத்தின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: