ரயில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்தூர் கிராமம், பெருமாள் கோ/fல் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் நீதிதேவன் (19). இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நீதிதேவன் மின்சார புறநகர் ரயிலில் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்யும் போது அந்த ரயில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது திடீரென கை வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு வலது மற்றும் இடது கால்கள் சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நீதிதேவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: