கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளுர்: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முற்பகல் 10 மணியளவில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி  நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பெறும். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என்றும் போட்டியில் கலந்து கொள்ளுமாறும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.  

Related Stories: