ஓய்வு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

காரியாபட்டி, மே 26: காரியாபட்டி அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.காரியாபட்டி அருகே செவல்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதிய சங்க ஒன்றிய தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜானகி முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் மாயமலை, ஊரக வளர்ச்சித் துறை மாநிலச் செயலாளர் புகழேந்தி, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.5 ஆண்டுகளாக பொது வருங்கால வைப்பு நிதி எனும் ஜிபிஎப் நிதி கிடைக்காமல் வறுமையில் வாடும் 24 அங்கன்வாடி ஓய்வூதிய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி கோரிக்கை வைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் தேசிய செல்வன் நன்றி கூறினார்.

Related Stories: