பள்ளபட்டி ஊராட்சியில் ரூ.18 லட்சம் பணிகளுக்கு பூமிபூஜை

சிவகாசி, மே 26: பள்ளபட்டி ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் உசிலைசெல்வம் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 48 பணிகளுக்கு நிர்வாக அனுமதி மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 56 வீட்டு காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, லிங்கபுரம் காலனி 9வது தெருவில் ரூ.2லட்சத்து 98ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் மற்றும் ரூ.1லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் வாறுகால், மீனாட்சி காலனியில் ரூ.3லட்சத்து 34ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் என ரூ.18 லட்சம் மதிப்பிலான 3 பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் உசிலைசெல்வம் பூமிபூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஊராட்சி செயலாளர் லட்சுமண பெருமாள்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: