குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

ராஜபாளையம், மே 26: ராஜபாளையம் அருகே வேர்ல்டு விஷன் இந்தியா ராஜபாளையம் வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக கணபதி சுந்தர நாச்சியார்புரம் ஊராட்சியில் ஏழை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை, காய்ச்சல் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை மற்றும் இலவச ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனை வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். உடன் ஊராட்சி தலைவர் காளியம்மாள், அங்கன்வாடி பணியாளர்கள் வேர்ல்டு விஷன் இந்திய பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 129 பயனாளிகள் 32 குழந்தைகள் பயன் பெற்றனர்.

Related Stories: