விவசாயி தற்கொலை

விருதுநகர்,மே 26: விருதுநகர் அருகே ராமகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இரண்டு வருடங்களுக்கு முன் விபத்தில் வலது கை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வச்சக்காரபட்டி போலீசில் மனைவி புஷ்பா புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: