சதுரகிரி கோயிலுக்கு செல்ல 5 நாட்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு, மே 26: சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை பிரதோஷம் என்பதால், மாலை 4.30 மணியில் இருந்து சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. வருகிற 30ம் தேதி அமாவாசையையொட்டி சு்நதரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுந்தரமகாலி்ங்கம் சாமி பரம்பறை அறங்காவலா் ராஜா (எ) பொியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்து வருகின்றனர்.

Related Stories: