குழந்தைத் திருமணத்தை தடுக்கும் ஊராட்சிக்கு சிறப்பு பரிசு உண்டு கலெக்டர் தகவல்

பெரியகுளம், மே 26: பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்து பேசியதாவது, தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளது. குழந்தைத் திருமணங்களை தடுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வரும் சுதந்திர தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்கள் தனிப்பட்ட முறையில் கவுரவிக்கப்படுவார்கள், என்றார்.

இம்முகாமில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் 319 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், அனைத்து துறைகளின் சார்பாக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் அந்தந்த துறையின் சார்பாக மக்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: