திருப்புவனம் அல்லிநகரத்தில் சுற்று பொங்கல் வைத்து வழிபாடு

திருப்புவனம், மே 26: திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் அய்யனார் கோயில் 40ம் ஆண்டு வருடாபிஷேகம், தீர்த்த பூஜை கடந்த மே 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 9ம் நாள் நிகழ்ச்சியான நேற்று முன்தினம் வைகாசி செவ்வாய் கிழமையில் ராஜ மாகாளியம்மனுக்கு ஆயிரம் பானைகளில் சுற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் அல்லிநகரம், வெள்ளக்கரை, முத்துப்பட்டி, காலனி உள்பட 4 கிராமமக்கள் ஒன்று கூடி சாதி வேறுபாடின்றி சுமார் 40 ஆண்டுகளாக சுற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருவதாக விழாக்குழு தலைவர் சூர்யபிரகாசு தெரிவித்தார். இன்று (மே 26) வருடாபிஷேகம், தீர்த்த பூஜை, அன்னதானம் நடக்கவுள்ளது.

Related Stories: