போக்சோவில் கைதானவர் தற்கொலை

சிங்கம்புணரி, மே 26: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், குளத்துபட்டியை சேர்ந்தவர் வெள்ளைத்துரை (20). இவர் மீது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த வெள்ளைத்துறை தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வழக்கு ெதாடர்பாக மனஉளைச்சல் ஏற்பட்டு, வீட்டிற்குள் சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெள்ளைத்துரை தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் உலகம்பட்டி போலீசார் வழக்குபபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: