நாளை வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, மே 26: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் தனியார் துறை சார்பில்  சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை, காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் வேலை வழங்கும் தனியார்  நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு  செய்யலாம். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஐடிஐ,  டிப்ளமோ படித்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள்  தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்  அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில்  பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து  செய்யப்படமாட்டது.

Related Stories: