மனநலம் பாதித்த மூதாட்டி அடித்து கொலை வாலிபர் கைது

ஆர்எஸ்.மங்கலம், மே 26:  ராமநாதபுரம்  மாவட்டம், ஆர்எஸ்.மங்கலம் அருகே அரியாங்கோட்டை கிராமத்தில் சுமார் 60 வயது  மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர்,  கடந்த 3 மாதங்களாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இவர் இப்பகுதி வீடு,  கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டும், ராமநாதபுரம் விலக்கு ரோட்டிலுள்ள ஒரு  கடை முன்பு படுத்து உறங்கியும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மூதாட்டி,  அங்குள்ள நூலக கட்டிடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில்  இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் திருவாடானை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ,  ஆர்எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்தினர். இதில் அரியாங்கோட்டையை சேர்ந்த புகழேந்தி (30) என்பவர்  மது போதையில் அப்பெண்ணை கருேவல மரக்கட்டையால் அடித்து கொன்றதாக  கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் புகழேந்தியை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: