திருவாடானை அருகே வாகனம் மோதி லோடுமேன் பலி

திருவாடானை, மே 26:   திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (43). லோடுமேன்.  இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டிலிருந்து சின்னக்கீரமங்கலத்தில் டீ  குடிப்பதற்காக திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது  மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய  வாகனம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: