ஆர்எஸ். மங்கலம் பகுதிaயில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு.

ஆர்எஸ்.மங்கலம், மே 26: ஆர்எஸ்.மங்கலம்  ஒன்றியம் பாரனூர் ஊராட்சியில் உள்ள குறுங்காட்டில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடத்தினை கலெக்டர் சஙகர்லால் குமாவத்  பார்வையிட்டார். தொடர்ந்து,  ஆவரேந்தல் கிராமத்தில் 15வது நிதிக்குழு  மானியம் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  கழிவுநீர் வடிகால் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட நூலக கட்டிடத்தையும்,  ஏஆர்.மங்களம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு, பிரதம மந்திரி குடியிருப்பு  திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடு  கட்டுமான பணியையும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்  ரூ.271.93 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி-ராமேஸ்மவரம் தேசிய நெடுஞ்சாலை  முதல் ஏஆர் மங்களம் வழியாக பேரையூர் சாலை வரை சுமார் 5 கிமீ நீளத்தில்  அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணியையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

இந்த  ஆய்வின் போது ஒன்றிய பிடிஓக்கள் முத்துக்கிருஷ்ணன், மலைராஜன் (கி.ஊ),  வட்டாட்சியர் சேகர், ஊராட்சி ஒன்றிய மேலாளர் (நிர்வாகம்) கோட்டைராஜ்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் (கடலூர்) முருகவள்ளி, (பாரனூ) மணிமேகலை மற்றும்  உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: