ராணுவவீரர் வீட்டில் 25 பவுன் கொள்ளை

திருமங்கலம், மே 26: திருமங்கலத்தில் ராணுவ வீரர் வீட்டிலிருந்த 25 பவுன் நகைகள், ரொக்கபணம் 30 ஆயிரம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமு(35). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சுந்தரலேகா(29). கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுந்தரலேகா தையல் வகுப்பிற்காக வீட்டை பூட்டி வெளியே சென்றார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. சந்தேகமடைந்து பீரோவிலிருந்து நகைகளை பார்த்த போது 25 பவுன் நகைகள், ரொக்க பணம் 30 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசில் சுந்தரலேகா புகார் செய்தார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: